தாமஸ் குக் விமான நிறுவனம் திவால்: 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல விமான நிறுவனமானதாமஸ் குக் விமான நிறுவனம் திவால் ஆனதாக இன்று அறிவிக்கப்பட்டதையடுத்து 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது!

17 நாடுகளில் 53 வெவ்வேறு இடங்களில் சிக்கியுள்ள சுமார் 150,000 பிரித்தானியர்களை பிரித்தானியாவுக்கு மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரித்தானியா தொடங்கியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் இத்தகைய மாபெரும் மீட்புப்பணி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்காக சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படும் என தெரிகிறது. சிவில் விமான அலுவலகம் 40 விமானங்களை இந்த மீட்பு பணிக்காக அனுப்பியுள்ளது.

இந்த மீட்புப்பணி இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், தாமஸ் குக் நிறுவன விமானங்களில் பயணிப்பதற்காக முன் பதிவு செய்துள்ள 150,000 பயணிகளில் பெரும்பாலானோரை திரும்பக் கொண்டு வர இலவச விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதல் விமானம் அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 300 பிரித்தானியர்களை ஏற்றிக்கொண்டு காலை 9.40 மணிக்கு மான்செஸ்டருக்கு புறப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

அந்த விமானம் மாலை மாலை 5 மணியளவில் மான்செஸ்டரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Terry Harris
PA:Press Association
Paul Marriott

Getty Images - Getty
AFP or licensors
Reuters
Reuters
Manos Chalampalakis photography

AFP or licensors
PA:Press Association
SWNS:South West News Service

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்