சில தினங்களில் நடக்கவிருந்த திருமணம்... Thomas cook நிறுவனத்தால் அழுது புலம்பும் மணப்பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
283Shares

Thomas cook நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவை சேர்ந்த மணப்பெண் தங்களுடைய திட்டம் அனைத்தும் சொதப்பிவிட்டதாக அழுது புலம்பி வருகிறார்.

178 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாமஸ் குக் திவாலாகிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இதனால் உலகளவில் 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் தங்களது வேலையை இழந்ததுடன். பலரும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

அந்த வரிசையில் பிரித்தானியாவை சேர்ந்த லாரன் ஷா - ரியான் ஆண்ட்ரியா என்கிற ஜோடி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் மூன்று வாரத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக தாமஸ் குக் நிறுவனத்திடம் 15,000 பவுண்டுகளில் திருமண செலவுகளுக்கான அனைத்தையும் முன் பதிவு செய்தனர். ஆனால் துரதிஷ்டமாக, தாமஸ் குக் நிறுவனம் திவாலாகிவிட்டதால், என்ன செய்வதென தெரியாமல் அழுது புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து மணப்பெண் ஆண்ட்ரியா கூறுகையில், அறிவிப்பு வெளியானதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் திருமண ஒருங்கிணைப்பாளருடன் கூட தொடர்பு கொள்ள முடியாததால் அழ ஆரம்பித்துவிட்டேன்.

இப்போது எங்களுடைய திருமணத்திற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த ஹோட்டலையே 6,000 பவுண்டுகளுக்கும், புதிதாக 4000 பவுண்டுகளுக்கும் விமானத்தை முன்பதிவு செய்துள்ளோம்.

திருமணத்திற்கு தேவையான வேறு எதுவும் ஏற்பாடு செய்ய இப்போது எங்களிடம் பணம் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு எனது திருமணத்தை பாழாக்கிவிட்டது. நான் இனி அங்கு செல்ல விரும்பவில்லை. வீட்டில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். தேனிலவிற்காக மட்டும் அந்த பயணத்தை மேற்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய காதலன் கூறுகையில், எங்களுடைய திருமணமானது ஒரு வருடத்திற்கும் மேலாக திட்டமிடப்பட்டது. அதை மூன்று வாரங்களில் ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. இது வேலை செய்யவில்லை என்றால், நாங்கள் முழு விடயத்தையும் ரத்துசெய்து திருமணத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்