இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மாத்திரைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த பிரித்தானியர் கைது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான valium மாத்திரைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு வேல்சிலுள்ள Swanseaயில் வசிக்கும் Roy Colin Bartram என்பவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றில், 48,000 valium மாத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த தேசிய குற்றவியல் ஏஜன்சி அவற்றை பறிமுதல் செய்து அழித்தது.

ஆனால் இந்த விடயம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு பார்சல் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டதை இடைமறித்து பறிமுதல் செய்த ஏஜன்சி, இம்முறை பொலிசாருக்கு தகவல் அளித்தது.

மொத்தத்தில் 50,000 மாத்திரைகள் அடங்கிய மூன்று பெட்டிகளைக் கைப்பற்றியதாக விசாரணை அதிகாரியாகிய Ian Ibrahim தெரிவித்தார்.

விசாரணையின்போது, தான் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது பார்சல் ஒன்று வரும், அதை வாங்கித் தந்தால் பார்சல் ஒன்றிற்கு 100 பவுண்டுகள் கிடைக்கும் என கூறப்பட்டதாகவும், மாதம் ஒன்றிற்கு ஒரு பார்சல் வீதம் ஓராண்டுக்கு தான் பெற்றுத் தந்ததாகவும், அதில் மாத்திரைகள் இருப்பது தெரியவந்ததும், தான் பார்சலை வாங்குவதை விட்டு விட்டதாகவும் தெரிவித்ததாக Bartram கூறியதாக Ian Ibrahim தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த மாத்திரைகளுக்காக 18 முறை இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ள Bartram, மொத்தத்தில் 28,000 பவுண்டுகள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண ஆசையில், யாரோ ஒருவரின் வழிநடத்துதலின்பேரில் Bartram இதை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தீர்ப்பளிக்கும் முன் பேசிய நீதிபதி, இந்த வழக்கு தாமதமாக நீதிமன்றத்திற்கு வந்துள்ளது, அதற்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள நீங்கள் காரணமல்ல என்பது தெரியவந்துள்ளது, அத்துடன் இந்த குற்றத்தில் முக்கிய குற்றவாளி வேறொருவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

எனவே Bartram தண்டனை பெறுவது உறுதி, ஆனால், அதற்கு சற்று காலதாமதமாகும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்