கொடூரமாக கொல்லப்பட்ட மாணவிக்காக மேகன் செய்த நெகிழ்ச்சி காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் யாருக்கும் தெரியாமல், தென் ஆப்பிரிக்காவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் தாயை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 19 வயதான கேப் டவுன் மாணவி யுயினே, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக சாலைகளில் திரண்டு பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தையுடன் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி மேகன், யாருக்கும் தெரியாமல் செப்டம்பர் 26ம் திகதியன்று மாணவியின் தாயை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் மாணவியின் நினைவிடத்தில் மஞ்சள் நாடா ஒன்றினை கட்டி அஞ்சலி செலுத்தினார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சோகமான சூழ்நிலையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதனை உறுதி செய்துள்ள அரண்மனை நிர்வாகம், இளவரசி மேகன் தனியார் விமானத்தில் சென்று அஞ்சலி செலுத்தியது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று விளக்கம் கொடுத்துள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்