இலங்கை பெண்ணை கொலை செய்ததற்காக பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட இருக்கும் நபர்: சூடுபிடிக்கும் வழக்கு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப்பெண் ஒருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு இந்தியாவில் சிறையில் இருக்கும் ஒருவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aman Vyas (34) என்ற இந்தியர் 2009ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த இலங்கைப்பெண்ணான Michelle Samaraweera (35) என்பவரை கொலை செய்ததாக 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அப்போது Aman Vyas, மாணவர் விசாவில் பிரித்தானியாவில் தங்கி இருந்தார்.

2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கிழக்கு லண்டனின் Walthamstow என்ற பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் ஒரு இளம்பெண் உடல் அரை நிர்வாணமாக கிடந்ததைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

Image: Steve Bainbridge

பொலிசார் வந்து பார்க்கும்போது அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட Michelle Samaraweera என்னும் இளம் விதவைப்பெண் என்பது தெரியவந்தது.

உடற்கூறு ஆய்வில், அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப்பின் May 5, 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி Aman Vyas கைது செய்யப்பட்டார்.

சுமார் பத்து ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த வழக்கு, தற்போது திடீரென சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Aman Vyas பிரித்தானியாவிற்கு நாடு கடத்தப்படும் அபாயத்திலிருப்பதாக தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி, புதிதாக ஒரு விடயத்தை போட்டு உடைத்துள்ளார்.

Michelle Samaraweera

அதாவது பிரித்தானியாவிலிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக தனது கட்சிக்காரர் Aman Vyas பலி கடா ஆக்கப்பட்டுள்ளார் என்கிறார் அவர்.

அதற்கு அவர் பல வாதங்களை முன்வைக்கிறார். அதாவது Michelle Samaraweera கொலை செய்யப்பட்டது 2009ஆம் ஆண்டு.

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி சொந்த காரணங்களுக்காக நியூசிலாந்து செல்வதற்கு Aman Vyas விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, லண்டன் பொலிசார் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அந்த சான்றிதழில் Aman Vyas எந்த வழக்கிலும் சிக்கவில்லை என்றும், அவர்மீது எந்த எதிர்மறையான அறிக்கைகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aman Vyas

அப்படியிருக்கும் நிலையில், 2011ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி DNA ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் Aman Vyasக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் ஒன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பின்னர் இந்தியாவிலுள்ள தனது உறவினர்களுடன் வாழ்வதற்காக இந்தியா திரும்பினார் Aman Vyas.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி டெல்லி நீதிமன்றம் Aman Vyasஐ பிரித்தானியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது திடீரென அவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்ற நிலையில், விஜய் மல்லையாவை நாடுகடத்தும் பிரச்னையில், தனது கட்சிக்காரர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்