ஆபாசப்படம் பார்த்து கொண்டிருந்த போது கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த பிரித்தானியர்... நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியர் ஒருவர் வேறு நாட்டுக்கு சென்று ஆபாசப்படம் பார்த்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இத்தாலிக்கு சமீபத்தில் சென்றார்.

அங்குள்ள ஆபாச படங்களை ஒளிப்பரப்புக்கும் கடைக்கு சென்ற அவர் படம் பார்த்து கொண்டிருக்கும் போதே திடீரென கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக குறித்த கடையின் உரிமையாளர் பிரான்கோ கூறுகையில், எங்கள் கடைக்கு வந்த நபர் சைக்கிளில் வந்தார்.

ஆபாசப்படம் பார்க்க வேண்டும் என கூறிய நிலையில் அவரிடம் இருந்து €5 வசூல் செய்துவிட்டு படம் பார்க்க அனுமதித்தோம்.

கடைக்கு வரும் போதே அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார் என கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர் குறித்த தகவல் அவர் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டதா என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்