லண்டனில் ஏமாற்றி அழைத்து வரப்பட்ட கர்ப்பிணி பெண்: டாக்ஸி சாரதியின் சமயோசித முடிவுக்கு குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் நபர் ஒருவரால் ஏமாற்றி அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு கர்ப்பிணி பெண் ஒருவரை பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து டாக்ஸி சாரதி பொலிசார் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் லண்டனின் கிங்ஃபீல்ட் சாலை, கோவென்ட்ரி பகுதியில் குடியிருக்கும் ராபர்ட் எனெஸ்கு என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் குறித்த நபர் இதுவரை பொலிசாரிடம் சிக்காத நிலையில், அவரை பிரித்தானியா பொலிசார் மற்றும் Europol உதவியுடன் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் பிரித்தானியரான ராபர்ட் எனெஸ்கு அளித்த வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பி ருமேனியா நாட்டவரான அந்த கர்ப்பிணி பெண் விமானம் மூலம் லண்டனுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை லண்டனில் உள்ள பாலியல் தொழில் விடுதி ஒன்றில் சிறை வைத்துள்ளனர்.

பின்னர் கோவென்ட்ரி பகுதியில் செயல்பட்டு வரும் பாலியல் விடுதி ஒன்றுக்கு Tahir Mehmood என்பவரின் வாடகை டாக்ஸியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Robert Enescu

தமது பயணி மிகவும் பதட்டமுடன் இருப்பதை அறிந்த மஹ்மூத் அவரிடம் அக்கறையுடன் விசாரித்துள்ளார்.

இதில் நடந்தவற்றை கூறிய அந்த ருமேனியா பெண்ணை காப்பாற்ற முடிவு செய்த மஹ்மூத், உடனடியாக அவசர பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

மஹ்மூதின் இந்த சமயோசித முடிவு தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் குறித்த ருமேனியா பெண்மணியை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.

அதன் அடுத்த நாள் குறித்த பெண்மணியின் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கிருந்து பாலியல் தொழிலுக்காக பல நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட பல பெண்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்