மகாராணி சாப்பிடும் உணவில் விஷம் கலக்கவிடாமல் எப்படி பாதுகாக்கிறார்கள் தெரியுமா? வெளியான ரகசியம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் சாப்பிடும் உணவில் யாரும் விஷம் கலந்துவிடாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறை குறித்து தெரியவந்துள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக திகழ்பவர் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்.

மகாராணிக்கு எப்போதும் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், ஜனாதிபதிகள், கோடீஸ்வர தொழிலதிபர்களுடன் சேர்ந்து விருந்தில் அவ்வபோது கலந்து கொள்வார்.

அது போன்ற முக்கிய சமயத்தில் மகாராணி சாப்பிடும் உணவில் யாரும் விஷம் கலக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு விடயம் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து Channel 5 தொலைக்காட்சிக்கு அரச குடும்பத்தின் correspondent எமிலி ஆண்ட்ருவுஸ் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எல்லோருக்கும் விருந்து தயாரான பின்னர் தட்டில் உணவுகள் வைக்கப்படும்.

அதில் குறிப்பிட்ட ஒரு தட்டு மகாராணிக்கு முதலிலேயே தரப்படாது, அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு தட்டில் உள்ள உணவுகள் தான் அவருக்கு தரப்படும்.

அதாவது மகாராணி சாப்பிடும் உணவில் யாரேனும் விஷம் கலக்க வேண்டும் என நினைத்தால் அங்குள்ள அனைத்து உணவுகள் வைக்கப்பட்ட தட்டிலும் விஷம் கலக்க வேண்டும்.

இந்த முறையை தான் நாங்கள் கையாளுகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்