என் தொடையில் கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார்! பிரித்தானியா பிரதமரைப் பற்றி இளம் பெண் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டதால், பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் ஜான்சன் எதிர்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் அவர் பிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு மகாராணியிடம் அனுமதி கேட்டிருந்தார். இது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தற்போது போரிஸ் ஜான்சன் மீது பிரபல பத்திரிகையில் நிரூபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண்பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதில், கடந்த 1999-ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது ஒரு கேவலமான பொய் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்