சரமாரியாக கேள்வி கேட்ட நிருபர்... கோபமடைந்த இளவரசர் ஹரி... பொது வெளியில் செய்த செயல்: சிக்கிய காட்சி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி, கேள்வி கேட்ட தொலைக்காட்சி நிருபரை திட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தனது மனைவி மேகன் மெர்க்கலுக்கு எதிராக தொடர்ந்து மோசமான தகவல்கள் பரப்பப்படுவதாக, ஊடகங்களை கடுமையாக சாடி செவ்வாய்க்கிழமை இரவு இளவரசர் ஹரி தனது தனிப்பட்ட இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும், The Mail செய்தித்தாளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹரி-மேகன் தம்பதியரின் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மலாவியில் உள்ள தொலைதூர கிராமத்தில் உள்ள சுகாதார கிளினிக்கிற்கு வருகை தந்தபோது ஹரி ஊடகங்களை அழைத்தார்.

அங்கு அவர் சுகாதார அதிகாரிகள் மற்றும் மலேரியா, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் உரையாடினார். இதனையடுத்து, அவர் இங்கு வந்ததற்கான நோக்கம் குறித்து தொலைக்காட்சி நிருபர் கேள்வி கேட்ட போது இளவரசர் கோபமடைந்தார்.

இதன் மூலம் நீங்கள் எதை அடைய முடியும் என்று நம்புகிறீர்கள்? என Sky News நிருபர் Rhiannon Mills, இளவரசர் ஹரியிடம் கேட்டார். பதிலளிப்பதற்கு முன் சிரித்த ஹரி, என்ன? அவர்களிடம் கேளுங்கள் என மருத்துவமனையை நோக்கி கைகாட்டினார்.

பின்தொடர்ந்த நிருபர், நீங்கள் இங்கு வந்து அவர்களுடன் பேசியதற்கான முக்கியத்துவம் என என்று கேட்டார். பத்திரிகையாளரை அவரிடமிருந்து விலகிச் செல்லமாறு சைகை காட்டிய ஹாரி, Rhiannon , இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என கூறிவிட்டு காரில் ஏறிச்சென்றார்.

நிருபர்களின் இதுபோன்ற நடத்தைகள் இனியும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அரண்மனை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியான குறித்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், இளவரசரின் நடத்தையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்