நன்றி தெரிவித்த பிரித்தானியா இளவரசர் வில்லியம்-கேட்... எதற்காக தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜின் ஆறாவது பிறந்தநாளின் போது வாழ்த்து செய்திகள் அனுப்பிய ரசிகர்களுக்கு, இளவரசி காட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருக்கும் அரச குடும்பத்தினரின் பிறந்தநாள் எப்படி கொண்டாடப்படும் என்பது அங்கிருக்கும் மக்கள் பலரும் அறிந்ததே, இந்நிலையில் குட்டி இளவரசர் ஜார்ஜ் தன்னுடைய 6-வது பிறந்தநாளை கடந்த ஜுலை மாதம் கொண்டாடினார்.

இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்து செய்திகளை அனுப்பினர். அதை எல்லாம் பெற்று கொண்ட மிடில்டன் மற்றும் வில்லியம், தங்களுடைய மகனின் பிறந்தநாளின் வாழ்த்து செய்திகளை கண்டோம், இது கண்டிப்பாக ஊக்கப்படுத்துவோம், நன்றி என்று அறிவித்துள்ளார்.

குறிப்பாக மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நபருக்கு, அவர்கள் அனுப்பிய கார்டினை, ரசிகர் ஒருவர் புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்