லண்டன் இரயிலில் ஊன்றுகோலுடன் நின்றிருந்த இளம்பெண்.. இருக்கை தராத பயணி... விமர்சனத்தை கிளப்பிய புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் இரயிலில் கால்களில் காயம் ஏற்பட்டு ஊன்று கோலுடன் நின்ற பெண்ணுக்கு இருக்கையில் லேப்டாப்புடன் உட்கார்ந்திருந்த ஆண் எழுந்து இடம் கொடுக்காததை பலரும் விமர்சித்துள்ளனர்.

லண்டன் இரயிலில் இரு தினங்களுக்கு முன்னர் சோனி பிலிப்ஸ் என்ற நபர் பயணம் செய்தார்.

அப்போது இரயில் கூட்டம் அதிகமாக இருந்ததால், இருக்கைகள் முழுவதிலும் பயணிகள் உட்கார்ந்திருந்ததால் மற்ற பயணிகள் பலரும் நின்றபடி இருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த தனி இருக்கையில் நபர் ஒருவர் உட்கார்ந்தவாறே தனது லேப்டாப்பை இயக்கி கொண்டிருந்தார்.

அவர் அருகில் பெண்ணொருவர் நின்று கொண்டிருந்தார், அந்த பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அதற்கான காலணியை அணிந்தபடி கையில் ஊன்று கோலை வைத்தபடி நின்றிருந்தார்.

இந்த காட்சியை சோனி புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு, ஊன்றுகோலுடன் நிற்க முடியாமல் தவித்த அப்பெண்ணுக்கு அந்த ஆண் எழுந்து தனது இருக்கையை கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும், அப்பெண்ணுக்கு ஆதரவாகவும் அதே சமயம் பலரும் லேப்டாப்புடன் உட்கார்ந்திருந்த ஆணுக்கு ஆதராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

டேன் பில்லிங் என்பவர் கூறுகையில், அந்த பெண் அவரிடம் இருக்கை வேண்டும் என கேட்டிருக்க வேண்டும், ஆனால் பயத்தில் அவர் கேட்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

பேக்கி ரோஸ் என்ற பெண்ணின் பதிவில், லேப்டாப்புடன் இருக்கும் ஆணுக்கு ஒருவேளை கால் ஊனமாக இருந்திருக்கலாம், அதை பார்க்காமல் அவர் மீது தப்பு சொல்லக்கூடாது என தெரிவித்தார்.

கிரிஸ்டோபர் என்பவர், நானும் பலரை பார்த்துள்ளேன் வேண்டுமென்றே முக்கிய வேலையில்லாமல் லேப்டாப்பை வைத்து கொண்டு அழகு சாதன பொருட்கள் குறித்து பார்ப்பார்கள் என அப்பெண்ணுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவுக்கு 775-க்கும் அதிகமான கருத்துகள் வந்துள்ளது.

இதனிடையில் இரயில் நின்றிருந்த பெண்ணுக்கு அந்த சமயத்தில் வேறு ஒரு நபர் தனது இருக்கையை விட்டு கொடுத்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்