லண்டன் இரயிலில் மோசமாக நடந்து கொண்ட நபருக்கு பதிலடி கொடுத்த பயணி யார்? வைரலான வீடியோ குறித்த உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் இரயிலில் மோசமாக நடந்து கொண்ட நபர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதோடு அவர் தலையில் வேகமாக முட்டிய நபர் காவல் துறை அதிகாரி என தெரியவந்துள்ளது.

லண்டன் இரயில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் சில தினங்களுக்கு முன்னர் வேகமாக பரவியது.

அதில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள இரயிலில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தாடி வைத்த நபர், சக பயணிகளை தவறான வார்த்தையால் கத்தியபடி இருந்தார், இதோடு சிலரை அடித்துள்ளார்.

இதையடுத்து அருகில் கோட் சூட்டில் இருந்த நபர் அவரை தட்டி கேட்டதோடு அவர் தலையில் வேகமாக தனது தலையை வைத்து முட்டினார்.

இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியானார்கள்.

இந்நிலையில் தனது தலையை வைத்து முட்டிய நபர் சாதாரண பயணி என பலரும் நினைத்த நிலையில் அவர் காவல்துறை அதிகாரி என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் மோசமாக நடந்து கொண்ட நபரின் பெயர் தனுத் பஸ்டியா (29) என்றும் தெரியவந்துள்ளது.

அவருக்கு நிரந்தரமான முகவரி இல்லை என்று பொலிசார் கூறியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்