பிரித்தானியாவில் உயிரிழந்த நிலையிலும் அன்பு மகள் திருமணத்தில் வந்து ஆசிர்வதித்த தந்தை! நெகிழ்ச்சி வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உயிரிழந்த தந்தையின் சாம்பலை மகள் தனது திருமணத்தின் போது செயற்கை நகத்தில் வைத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரோலேட் வாட்சன் என்ற பெண்ணுக்கும் நிக் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த சூழலில் சரோலேட்டின் தந்தை மிக் பார்பர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது சரோலேட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தனது திருமணம் நடக்கும் போது தந்தை உடன் இருக்க மாட்டாரே என வேதனையடைந்தார்.

இந்த சமயத்தில் தான் சரோலேட்டின் உறவினர் கிறிஸ்டி ஒரு யோசனையை சொன்னார், அதாவது போலியான நகங்களை விரல்களில் வைத்துவிடுவதில் கைதேர்ந்தவரான கிறிஸ்டி உயிரிழந்த மிக் சாம்பலை அந்த நகத்தின் உள்ளே வைத்து சரோலேட் விரலில் மாட்டிவிட முடிவு செய்தார்.

அதன்படியே சாம்பலை நகத்தில் வைத்து திருமண நாளில் சரோலேட் விரல்களில் அது பொருத்தப்பட்டது.

இதன் பின்னர் சரோலேட் திருமணம் நடைபெற்றது. இது குறித்து அவர் கூறுகையில், என் தந்தை என்னுடன் இங்கு இருப்பது போலவே உணர்கிறேன்.

பலவித நிறங்களில் நகங்கள் தயார் செய்யப்பட்டு அதன் உள்ளே சாம்பல் வைக்கப்பட்டது. இது என் தந்தை எனக்கு அளித்த ஆசிர்வாதமாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்