19 பில்லியன் பவுண்டுகள்... பிரித்தானிய ராணியின் பெயரில் பொதுமக்களிடம் பணம் திரட்டிய கும்பல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

Brexit தொடர்பில் தற்போதைய சூழலை சமாளிக்க 19 பில்லியன் பவுண்டுகள் தேவை என்றும், வசதி படைத்த பொதுமக்கள் bitcoin மூலம் பண உதவி செய்ய வேண்டும் என பிரித்தானிய ராணியின் பெயரில் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த கடிதமானது பிரித்தானிய ராணியின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் வெளியாகியுள்ளது.

அதில், பண உதவி மேற்கொள்ளும் நபர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு 30 விழுக்காடு வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்ய பயன்படுத்தப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக தொகை அளிக்கும் பொதுமக்களுக்கு, ராயல் முத்திரை பதிக்கப்பட்ட சான்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, பொதுநலன் கருதி குறித்த கடிதமானது பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிட விரும்பவில்லை எனவும், அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தங்களை சீர்குலைக்க வழிவகுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Image: Getty)

மேலும், பணம் அனுப்பவேண்டிய முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய பிரித்தானிய நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி,

பொதுமக்கள் இதுபோன்ற போலியான கடிதங்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணியார் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கடிதம் போலி எனவும், ராணியாரின் முத்திரையும் போலி என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக ராணியார் சார்பில் எழுதப்படும் கடிதங்கள் சாதாரன தாள்களில் அச்சிடப்படுவதில்லை எனவும்,

தற்போது வெளியான கடிதமானது சாதாரண தாளில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அதுவும் bitcoin மூலம் பணம் அனுப்ப கோரியுள்ளது முதன்முறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்