பிரித்தானியாவில் நடந்த கோர விபத்து... மனித உடல்கள் மீது ஏறி மிதித்து உயிர் தப்பிய இளைஞர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடந்த பேருந்து விபத்தில், உயிர் தப்புவதற்காக இளைஞர் ஒருவர் மயக்க நிலையில் கிடந்த மனித உடல்கள் மீது ஏறிக்குதித்து வெளியில் வந்துள்ளார்.

இங்கிலாந்தின் டெவன் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் காயமடைந்த புரூஸ் டாக்கா என்பவர் விபத்து குறித்து பேசுகையில், அந்த விபத்து சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டது. என் மேல் காயங்களுடன் பலரும் விழுந்து கிடந்தனர்.

எனக்கு கீழே ஒரு முதியவர் கிடந்தார். 10 நிமிடங்கள் அந்த இடர்பாடுகளில் சிக்கித்தவித்து கொண்டிருந்தேன். ஒரு புறம் என்னுடைய கையில் காயாமடைந்து இரத்தம் அதிகமாக வெளியேறி கொண்டிருந்தது. அதன்பிறகு மயக்கமடைந்தவர்கள் மீது ஏறி வெளியில் தப்பி வந்தேன்.

வெளியில் பொலிஸாரும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தன. உடனே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்