30,000 அடி உயரத்தில் கோளாறான விமானம்.. மரண பயத்தில் பீதியடைந்த பயணிகள்: திறன்பட காப்பாற்றிய ஹீரோ விமானி

Report Print Basu in பிரித்தானியா

இத்தாலியில் இருந்து பிரித்தானியா பயணித்த விமானத்தில், நடுவானில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 320 விமானம், இத்தாலியின் bari-யில் இருந்து லண்டனின் Gatwick-க்கு பயணித்துள்ளது.

30,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது விமானத்திற்குள் புகை சூழந்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் பதட்டமடைந்து பீதியடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியதாவது, விமானத்திற்குள் புகை சூழ்ந்தவுடன் பயணிகள் மட்டுமின்றி விமானக்குழுவினரும் பதட்டமடைந்தனர். எனினும், உடனே விமானம் அவசரமாக தரையிறக்கப்படுகிறது என விமானி அறிவித்தார்.

இதனையடுத்து, விமானம் சுவிட்சர்லாந்தின் Basle விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், விமான நிறுவனம் மற்றொரு விமானத்தை அனுப்பி பயணிகளை பிரித்தானியாவுக்கு அழைத்து சென்றுள்ளது.

விமானம் அவசரமாக தரையிறங்கிய உடன் அவசர உதவி குழு மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், முன்னெச்சரிக்கையாக நான்கு விமானக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என Basle விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் இதுபோல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் புகை சூழ்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்