மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையலை கண்டுபிடித்த குழுவினர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நிலத்தை தோண்டிய குழுவினர், அதில் கிடைத்த 3 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய புதையலை அரசாங்கத்துக்கு தெரிவிக்காமல் மறைத்த சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடந்துள்ளது.

George Powell (38) மற்றும் Layton Davies (51) என்னும் இருவர்மீது நிலமொன்றில் கண்டெடுக்கப்பட்ட புதையல் குறித்து அரசுக்கு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களுடன் Herefordshire என்ற இடத்திலுள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலை மறைக்க உதவியதாக Paul Wells (60) மற்றும் Simon Wicks (57) என்னும் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டப்படி அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த புதையல் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டும்.

ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பொருட்களை கருப்புச் சந்தையில் விற்க தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த புதையலில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த 300 நாணயங்களும், சில விலை மதிப்பில்லா நகைகளும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சில நகைகளும் அடங்கும்.

இவ்வளவையும் கண்டெடுத்த Powell, வெறும் மூன்று நாணயங்களை மட்டும் நிலத்தின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார், அதுவும் அவை பெரிய அளவில் மதிப்பேதும் இல்லாதவை. நிலத்தின் உரிமையாளரான Yvonne Conod, தன்னிடம் தனது மெட்டல் டிடெக்டரை தனது நிலத்தில் பயன்படுத்த Powell அனுமதி கோரியதாகவும், தான் அதற்கு சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிலிருந்து கிடைத்த விலையேறப்பெற்ற பொருட்கள் சிலவற்றின் புகைப்படங்களை மட்டும் தன்னிடம் காட்டிய Powell, அவற்றை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க இருப்பதாக கூறியதாகவும், அவர் அவ்வாறே செய்திருப்பார் என தான் நம்பியதாவும் தெரிவித்தார். வழக்கு தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்