லண்டன் விமானத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்... வேதனையுடன் வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு அவர் இருக்கைக்கு முன்னர் இருக்கும் திரையில் மோசமான பதிவுகளை அனுப்பிய நபர்களின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் ஜெசிகா வேன் மியர். இளம் பெண்ணான இவர் பிரித்தானியாவில் சட்ட நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு ஜெசிகா விமானத்தில் பயணித்தார்.

அப்போது தனக்கு சில ஆண்களால் நேர்ந்த பிரச்னை குறித்து அவர் டுவிட்டரில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், என் இருக்கைக்கு முன்னால் இருக்கும் திரையில் சில மெசேஜ்கள் வந்தது.

அதை என் இருக்கைக்கு ஒன்பது இருக்கைக்கு பின்னாடி உட்கார்ந்திருந்த ஆண்கள் அனுப்பியிருந்தனர்.

அதில் ஒரு மெசேஜில், என் உடல்வாகை ஒருவர் தவறாக வர்ணித்து அனுப்பினர்.

இன்னொரு மெசேஜில் உங்களை நரகத்துக்கு வரவேற்கிறேன் என இருந்தது. இது போல பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பதிவுகள் எனக்கு வந்தது.

இதை தொடர்ந்து நபர் ஒருவர் என்னிடம் வந்து தவறான மெசேஜ் அனுப்பிய ரக்பி குழுவினரின் பயிற்சியாளர் நான், அவர்கள் மது போதையில் இவ்வாறு செய்துவிட்டார்கள், அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்களை தடுக்க விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த விமான நிறுவனம், உங்கள் பதிவுகளை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது, பயணிகள் மேற்கொள்ளும் செயலுக்கு எல்லா சமயத்திலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

அதே சமயம் இது போன்ற நடத்தைகளை ஏற்று கொள்ள முடியாது, இது தொடர்பான மேலாதிக்க விபரங்களை எங்களிடம் கூறுங்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்