ஐந்து பேரப் பிள்ளைகளின் இளவரசர் பதவியை பறித்த அரசர்: இனி அவர்கள் சாதாரண பிரஜை எனவும் அறிவிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளவரசர் சார்லஸ் அடுத்த மன்னராகும் சூழல் உருவாகிவரும் நிலையில், ஸ்வீடன் அரசர் தமது பேரப் பிள்ளைகள் ஐவரின் இளவரசர் பதவியை பறித்து, இனி அவர்கள் சாதாரண பிரஜைகள் என அறிவித்துள்ளார்.

ஸ்வீடனின் அரசர் Carl XVI Gustaf இந்த அதிரடி முடிவை மேற்கொண்டதுடன், அரசவை தொடர்பான எந்த பதவிகளிளும் பொறுப்புகளிலும் அவர்கள் இனி வரமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இதில் ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப்பின் இரு ஆண் பிள்ளைகளும் இளவரசி மாடெலெய்னின் 3 பிள்ளைகளும் தங்கள் இளவரசர் மற்றும் இளவரசி பதவியை இழக்கின்றனர்.

மட்டுமின்றி இளவரசர் பதவியை இழந்துள்ள இந்த ஐவரும் இனிமுதல் பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து எந்த உதவிகளையும் பெற தகுதியை இழப்பதாக அரசர் Carl XVI Gustaf அறிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அதிகாரபூர்வ பெயர்கள் எதிர்காலத்தில் தங்கள் துணைகளுக்கோ பிள்ளைகளுக்கோ அளிக்கவும் முடியாது என அரசர் அறிவித்துள்ளார்.

(Image: Getty Images)

அரசரின் இந்த அதிரடி முடிவானது மொத்த குடும்பமும் இணைந்து மேற்கொண்டது எனவும், பொதுமக்களில் பலரும் பல ஆண்டுகளாக விவாதித்து வந்த இந்த விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் அரசவை முக்கிய அதிகாரி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே ஸ்வீடன் அரசர் தொடர்பான உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் இருந்து அனைவரின் புகைப்படங்களையும் நீக்கியுள்ளதுடன்,

அரசர் Carl XVI Gustaf மற்றும் அவரது அடுத்த வாரிசுகள் இருவரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

ஸ்வீடன் அரசருக்கு மூன்று பிள்ளைகள். பட்டத்து இளவரசி விக்டோரியா, இவரது மகள் இளவரசி Estelle மற்றும் இளவரசர் ஆஸ்கார்.

(Image: Instagram)

தற்போது ஸ்வீடன் அரசரின் முடிவால் பட்டத்து இளவரசி விக்டோரியா மற்றும் இவரது மகள் இளவரசி Estelle மட்டுமே இனி ஸ்வீடனின் அரசியாக முடி சூட முடியும்.

எஞ்சிய இரு பிள்ளைகளான இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி மாடெலெய்ன் ஆகிய இருவரது பிள்ளைகளின் இளவரசர் பதவிகளையே தற்போது ஸ்வீடன் அரசர் பறித்து, சாதாரண பிரஜைகள் என அறிவித்துள்ளார்.

இதே சூழல் பிரித்தானியாவிலும் எழ வாய்ப்புள்ளதாக இளவரசர் சார்லஸ் பயப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Image: AFP/Getty Images)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்