சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி நேக்காக தப்பிக்கும் பாலியல் குற்றவாளிகள்: அஞ்சும் குழந்தை ஆர்வலர்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி பாலியல் குற்றவாளிகள் தொடர்ந்து குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குழந்தை நல ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது 1,300 பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் தங்கள் பெயர்களை சட்டப்பூர்வமாக மாற்றி தப்பியுள்ளதாக குழந்தை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பாலியல் குற்றவாளிகள் ஆன்லைனில் வெறும் 15 பவுண்ட் செலவு செய்து சிறையில் இருந்த படியே பெயரை மாற்றுகின்றனராம்.

குற்றத்தில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் சமூகத்திற்குள் மறைந்து குழந்தைகளை அச்சுறுத்தலாம். இதை தகவல் சுதந்திரக் கோரிக்கை தரவுகளை ம் ஆய்வு செய்து Safeguarding Alliance இதை கண்டறிந்துள்ளது.

இந்த நடைமுறை குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக குழந்தை தொண்டு நிறுவன உரிமையாளர் Emily Konstantis எச்சரித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வழக்கையும் கண்காணிக்க ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகள் எத்தனை பேர் குழந்தைகள் அல்லது பள்ளிகளில் அல்லது நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளனரா? என Emily எழுப்பியுள்ளார்.

இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் எங்களுக்கு வழங்கப்பட்டது 1,300 க்கும் அதிகமானவை. பெயர் மாற்றத்தை எத்தனை பேர் அறிவிக்கவில்லை என்பதுதான் பிரச்னை.

டோரி எம்.பி. Robert Halfon இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை செயலாளர் ராபர்ட் பக்லாண்டிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும், பிரித்தானியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக சுமார் 500 பேர் கைது செய்யப்படுகிறார்கள் என புள்ளிவிவரம் காட்டுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்