லண்டனில் பெற்ற பிள்ளைக்கு விஷம் வைத்த வெளிநாட்டு பெற்றோர்: வெளிவரும் உண்மை பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் உள்ள பிரபல சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைக்கு அவரது பெற்றோர் அதிக அளவு இன்சுலின் மருந்து அளித்துள்ள சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய நாட்டவர்களான முகமது அசிரி(38), மற்றும் அவரது மனைவி அமல் அசிரி(29) ஆகிய இருவருமே தற்போது சிகிச்சையில் இருந்துவந்த தங்கள் பிள்ளைக்கு அதிக அளவு இன்சுலின் மருந்து தந்த வழக்கில் சிக்கி பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முகமது அசிரியின் பிள்ளைக்கு உணவு அருந்துவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் சவுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் லண்டனுக்கு எடுத்துவந்து இங்குள்ள எவெலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டிய நிலையில், இனி பிரச்னை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தபடியால் அதே ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மீண்டும் பிள்ளையை எடுத்துக் கொண்டு முகமது அசிரி குடும்பம் எவெலினா குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் அடுத்த சில தினங்களில் பிள்ளையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கடுமையாக சரிந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்த பிள்ளைக்கு அளிக்கப்பட்ட இன்சுலின் மருந்தால் ஏற்பட்டது என்பதை அறிந்த மருத்துவர்கள், இது பிள்ளையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொண்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.

மட்டுமின்றி குழந்தையை ஆபத்தான நிலையில் மீண்டும் மருத்துவமனையில் சேர்ப்பித்த பிப்ரவரி 13 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை அளவுக்கு அதிகமாக இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக ஒருவர் சாப்பிடுவதை பல நாட்களாக நிறுத்திக் கொண்டால், அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பிருப்பதாக அசிரி குடும்பத்திற்கு ஆதரவாக வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அசிரி குடும்பத்தின் மீது எந்த தவறும் இல்லை எனவும், சிலவேளை செவிலியர்களின் கவனக்குறைவால் இன்சுலின் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அசிரி குடும்பம் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் தொடரும் என்பதால், அதன் பின்னரே தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்