பிரித்தானிய பிரதமருக்கு ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்தது உண்மைதான்: போட்டு உடைத்த ’நண்பர்’!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமருக்கு ஜெனிபர் அர்குரி என்ற பெண்ணுடன் தவறான உறவு இருந்தது உண்மைதான் என்ற உண்மையை, அவரது ’நண்பர்’ ஒருவர் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

லண்டனில் மேயராக இருந்தபோது, உணவு இடைவேளைகளின்போது ஒரு வீட்டுக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அடிக்கடி சென்று வந்ததாகவும், அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு தவறான தொடர்பு இருந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

பின்னர், அந்த பெண்ணின் பெயர் ஜெனிபர் அர்குரி என்பதும், தற்போது அவர் திருமணமாகி அமெரிக்காவில் வசிப்பதும் தெரியவந்தது.

தங்களுக்குள் இருந்தது தொழில் முறை உறவுதான் என்று ஜெனிபர் தொடர்ந்து கூறிவர, போரிஸ் ஜான்சனும் தங்களுக்கிடையே தவறான உறவு ஏதும் இல்லை என்றே மறுத்து வந்தார்.

ஆனால் தற்போது போரிஸ் ஜான்சனையும் ஜெனிபரையும் நன்கறிந்த Milo Yiannopoulos என்னும் ஒருவர், அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

அதோடு நிற்காமல், சில அந்தரங்க தகவல்களையும் போட்டு உடைத்துள்ளார் அவர். ஜெனிபர், தான் போரிஸ் ஜான்சனுடன் பாலுறவு வைத்துக் கொள்வதைக் குறித்து பெருமையாக பேசிக்கொள்வதுண்டு என்றும், அதுவும் மது குடிக்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுவார் அவர் என்றும் கூறியுள்ளார் Milo.

ஒரு நாள் மிகவும் குட்டையான பாவாடை ஒன்றை அணிந்து வந்த ஜெனிபர், தன் தொடையில் இருந்த சில கீறல்களை எல்லோரிடமும் காட்டி, அவை தன்னுடன் போரிஸ் ஜான்சன் பாலுறவு கொள்ளும்போது ஏற்பட்டவை என்று பெருமையடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார் Milo.

இவை அடிபட்டதால் ஏற்பட்ட காயங்கள் அல்ல, அவை போரிஸ் கீறல்கள் என்றும், உற்சாகத்துடனும், இருவரும் மனம் ஒருமித்தும் பாலுறவு கொள்ளும்போதும் ஏற்பட்ட பரிசுக்கோப்பைகள் அவை என்றும் ஜெனிபர் எல்லோர் முன்னிலையிலும் பெருமையடித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Milo.

அப்படிச் சொல்ல வேண்டாம் என தான் ஜெனிபரை பல முறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் Milo.

இதற்கிடையில், சமீபத்தில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கும் ஜெனிபருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கேட்டபோது, உங்கள் பாலியல் வாழ்க்கை குறித்து நீங்கள் வெளிப்படையாக பேசுவீர்களா என அவரையே ஜெனிபர் திருப்பிக் கேட்ட விடயம், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்