இறந்த குழந்தையுடன் ஐந்து நாட்கள் செலவிட்ட பெற்றோர்: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் மகள் இறந்த பின்னரும், அவளுடன் அவளது பெற்றோர் ஐந்து நாட்கள் செலவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Malton என்ற பகுதியைச் சேர்ந்த Kristian D'Rosario (30)க்கும் அவரது மனைவி Emily Nixon (25)க்கும் Darcy Roger (6) என்ற அழகான தேவதை பிறந்தபோது அவளுக்கு அபூர்வ நோய் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

20 அறுவை சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்ட Darcy, தனது ஆறாவது வயதில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி உயிரிழந்தாள்.

எப்போதுமே ஒரு அக்கா ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட Darcyயின் ஆசையை நிறைவேற்ற, Bea என்ற குட்டி தேவதை பிறந்தாள்.

ஆசை தீர தங்கையுடன் விளையாட விரும்பிய Darcyக்கு மொத்தம் ஐந்து நாட்கள்தான் கிடைத்தன... ஆம், தங்கை பிறந்து ஐந்து நாட்கள் அவளுடன் ஆசை தீர அளவளாவிய Darcy, இறந்துபோனாள்.

குழந்தை பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில், பிறந்த குழந்தை மீது கவனம் செலுத்துவதா அல்லது இறந்த குழந்தையை அடக்கம் செய்வதா என தடுமாறிப்போயினர் Darcyயின் பெற்றோர்.

Darcyயை பிரிய மனமில்லாத அவளது பெற்றோருக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்கிறது.

இறந்த தங்கள் குழந்தையின் உடலுடனாவது சில நாட்கள் செலவிட முடியுமா என மருத்துவர்களைக் கேட்க, குளிரூட்டப்பட்ட அறை ஒன்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

ஐந்து நாட்கள் தங்களுக்கு பிரியமான Darcyயின் உடலுடனும், அவளுக்கு பிரியமான அவளது தங்கை Beaயுடனும் செலவிட்ட தம்பதி, தங்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு இடத்திலேயே Darcyயை அடக்கம் செய்துள்ளார்கள்.

அவளை அடிக்கடி சென்று பார்த்துக்கொள்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. எப்போதும், அம்மா என்னுடனேயே இருங்கள் என்பாளாம் Darcy. உயிர் பிரியும்போது கூட, அவளது கண்கள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல உணர்ந்ததாக நெகிழ்கிறார் Darcyயின் தாய் Emily.

Bea வளர்ந்தபின் அவளுக்கு காட்டுவதற்காக அக்காவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாதுகாத்து வைத்திருக்கிறார் Emily.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்