பிரித்தானியா அதிகாரிகளை பழிவாங்க இராணுவ ரகசியங்களை திருடிய நபர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உயர் ரகசிய இராணுவ தகவல்களை அனுப்பியதாகக் கூறி அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சவுத் வேல்ஸின் ஸ்வான்சீவைச் சேர்ந்த சைமன் பிஞ்ச் (49), கடந்த ஆண்டு அக்டோபரில் பாதுகாப்பு ரகசியங்களை 'சேதப்படுத்தியதாக' குற்றம் சாட்டப்பட்டார்.

பொலிஸாருடன் ஏற்பட்ட தொடர்ச்சியான கருத்து வேறுபாட்டால், பிரித்தானியா அதிகாரிகளை பழிவாங்க 'பல விரோத வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு' முக்கியமான விவரங்களை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.

பிஞ்ச் தன்னை வகைப்படுத்தப்பட்ட கணினிகளில் பணிபுரியும் ஒருவர், ஓரளவு மன இறுக்கம் கொண்டவர் மற்றும் தகவல் அல்லது காட்சி படங்களை மிக விரிவாக நினைவில் வைக்கும் திறன் கொண்டவர் என்றும் கூறினார்.

அவர் 20 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் பணியாற்றியதாகவும், தனக்கு ரகசிய மற்றும் உயர் ரகசிய தகவல்களை அணுக தெரியும் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜேர்மனியில் இருந்து கூற்றுக்களை முன்வைத்த அவர், பிரித்தானிய பொலிஸார் தன்னை இழிவான முறையில் நடத்தியதாக கூறினார்.

பிரித்தானிய எனக்கு நீதி, இழப்பீடு, சிகிச்சையை மறுத்துவிட்டது. அதனால் என்னிடம் இருந்து விசுவாசத்தை எதிர்பார்க்க பிரித்தானியாவிற்கு எந்த உரிமையும் இல்லை.

கடந்த பத்து மாதங்களாக நான் பணியாற்றிய இராணுவ அமைப்புகளின் இரகசிய, உயர் ரகசியம் மற்றும் குறியீட்டு தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கிறேன் என்று சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

'இந்த தகவல் பல விரோத வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு (சுதந்திரமாக) அனுப்பப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பை தேசம் கவனிக்கவில்லை என்றால் நான் ஏன் தேசிய பாதுகாப்பை கவனிக்க வேண்டும்?' என பேசியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிணையில் இருக்கும் சைமன் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்