எனது மகன் கொல்லப்படலாம்... சிரியாவை நெருங்கும் துருக்கி படைகள்: கதறும் பிரித்தானிய தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவால் வடகிழக்கு சிரியா மீது துருக்கி படையெடுக்குமானால் தமது மகன் கொல்லப்படலாம் என பிரித்தானிய தாயார் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜிஹாதி ஜாக் என அறியப்படும் பிரித்தானியரான ஜாக் லெட்ஸ் என்பவரின் தாயாரே தற்போது தமது மகன் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

குர்துகளின் ஆதிக்கம் மிகுந்த சிரியா ராணுவமானது, துருக்கிய ராணுவ நெருக்கடியை சமாளிக்க, தற்போது சிறையில் இருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை விடுதலை செய்யலாம், அல்லது அவர்களை துருக்கிய படைகளுக்கு எதிராக போருக்கு அனுப்பலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

குர்து போராளிகளின் கைவசம் உள்ள பகுதிகளை போரிட்டு மீட்போம் என துருக்கி அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டின் பார்வையில் குர்துகள் பயங்கரவாதிகள் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைந்த பிரித்தானியரான லெட்ஸ், குர்து படையினரால் கைது செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டில் இருந்தே சிறையில் உள்ளார்.

வடகிழக்கு சிரியாவில் குர்து படைகளால் சிறை வைக்கப்பட்டுள்ள பல பிரித்தானிய ஜிஹாதிகளில் லெட்ஸும் ஒருவர்.

தற்போது தமது மகன் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள Sally Lane, எனது மகன் துருக்கி அத்துமீறலில் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன் என தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் எனக்கு கவலை இல்லை, ஆனால் அதில் ஒருவர் எனது மகன்.

குர்து ராணுவத்தினர் தற்போது சிறையில் இருக்கும் ஐ.எஸ் கைதிகளை துருக்கி ராணவத்திற்கு எதிராக போராட கட்டாயப்படுத்தலாம்.

மட்டுமின்றி அடுத்த 24 மணி நேரத்தில் துருக்கி படைகள் வடகிழக்கு சிரியாவை தாக்கும் என அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே Sally Lane தற்போது தமது மகன் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்