உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

Report Print Nivetha in பிரித்தானியா

பிரித்தானியாவில் 05.10.2019 அன்று Wembley மாநகரில், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்து பல வருடங்கள் சதுரங்கத்தில் தேசிய, சர்வதேச அனுபவம் வாய்ந்த சதுரங்க விளையாட்டாளர் கந்தையா சிங்கத்தினால் சதுரங்கப் பயிற்சிப்பட்டறை ஒன்று நடாத்தப்பட்டது.

அதில் சுமார் 60க்கு மேற்பட்ட இளையோர் பெரியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பட்டறையின் முடிவில் கந்தையாசிங்கம் அவர்களால் 7 பேர்கொண்ட உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பில் பிரித்தானியா, சுவிஸ், நேர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள சதுரங்க வீரர்களையும் ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன்தலைவராக ரகுராஜ்தர்மரட்ணம் அவர்கள் நியமிக்கப்படார். முக்கிய உறுப்பினர்களாக ஆண்டனி அமரபால (நோர்வே). கந்தையா ஜெயபாஸ்கரன் (சிவா) சுவிஸ்,ஸ்ரீரஞ்சனிவரதன் (பிரித்தானியா), சாய்மருகன் (பிரித்தானியா) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதனை விரிவு படுத்தும் தமாகமற்றய நாட்டுசதுரங்க ஆர்வலர்களையும் இணைக்கும் முயற்சியினை முன்னெடுப்பது.

அதனைத் தொடர்ந்து பெரியளவில் லண்டன் நகரில் ஒரு போட்டியினை நடத்துவது, எமது சிறுவர்களை தேசிய, சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது, எமது தாயகத்தில் சதுரங்க ஆர்வத்தினை ஊக்கப்படுத்துவது போன்ற தீர்மானங்கள் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்