பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறும் பட்சத்தில், பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சிக்கல்களை சந்திப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்த வார இறுதிக்குள் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இம்மாதம் (அக்டோபர்)31ஆம் திகதி, ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமானால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்கான பாஸ்போர்ட் விதிகள் கடுமையாக்கப்படும்.

பொதுவாகவே பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு மூன்று வாரங்கள் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே, அதன்படி பார்த்தால், அக்டோபர் 31 அன்று பிரெக்சிட் நிறைவேற இருப்பதால், அதற்கு முன் மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை.

ஒருவரது பாஸ்போர்ட் புதிய விதிகளுக்கு உடன்படாததாக இருக்கும்பட்சத்தில், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் புது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும், அதுவும் நாளைக்குள்...

அப்போதுதான் அவர்கள் பிரெக்சிட்டுக்குப்பின் ஐரோப்பாவுக்குள் பயணிக்கமுடியும். மக்கள் தங்கள் பாஸ்போர்ட்களின் நிலை குறித்து சோதித்தறியும்படி நினைவூட்டுவதற்காக, ஒரு மில்லியன் குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வருவதாக, கடந்த மாதமே உள்துறைச் செயலரான பிரீத்தி படேல் அறிவித்திருந்தது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறும் பட்சத்தில், இரண்டு முக்கிய விதிகளுக்கு பாஸ்போர்ட்கள் உடன்படவேண்டும்.

முதலாவது, ஒவ்வொரு பாஸ்போர்ட்டுக்கும் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் காலாவதி காலம் இருக்கவேண்டும்.

இரண்டாவது விதி காலாவதியாகும் முன் தங்கள் பாஸ்போர்ட்களை புதுப்பித்துக்கொண்டவர்களுக்கு பொருந்தும்.

அவர்களுக்கு பாஸ்போர்ட் செல்லத்தக்க உபரி மாதங்கள் வழங்கப்படும். இந்த வகையில், 10 வருடங்கள் பழமையான பாஸ்போர்ட்களுக்கு வழங்கப்படும் உபரி மாதங்களை, முதல் விதியின்படி தேவைப்படும் ஆறு மாதங்களில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படாது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்