ஐ.எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட தந்தை: சிரியாவுக்கே சென்று நியாயம் கேட்ட பிரித்தானிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
184Shares

ஐ. எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரின் மகள், சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளின் மனைவிகளிடம், அவர்களது முகத்துக்கு நேராக அவரது மரணத்துக்கு நியாயம் கேட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

David Haines (44), 2013ஆம் ஆண்டு சிரியாவில் சர்வதேச தொண்டு நிறுவனத்திற்காக பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, ஐ. எஸ் தீவிரவாதிகள் அவரை கடத்தினார்கள்.

2014ஆம் ஆண்டு 'The Beatles' என்று அழைக்கப்பட்ட நான்கு தீவிரவாதிகள் கொண்ட ஒரு குழுவால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார் David Haines.

அந்த நால்வரில், ஜிகாதி ஜான் என்று அழைக்கப்படும் Mohammed Emwaziயும் ஒருவர். இது நடந்து ஆறு ஆண்டுகளுக்குப்பின் சிரியாவுக்கு சென்றிருக்கும் David Hainesஇன் மகளான Bethany Haines, தனது தந்தை கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் முகாம் ஒன்றிலிருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் மனைவிகளிடம் தனது தந்தையின் புகைப்படத்தைக் காட்டி, அவரது மரணத்துக்கு நியாயம் கேட்க, ஒரு பெண் தான் மிகவும் வருந்துவதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் அங்கு வந்த மற்றொரு தீவிரவாதியின் மனைவி, தீவிரவாத சம்பவங்களுக்கு நியாயம் கற்பிப்பது போல் குரல் உயர்த்திப்பேச, கோபமடைந்த Bethany அங்கிருந்து அகன்றுவிட்டார்.

இந்த பெண்கள் தாங்கள் வருந்துவதாக வார்த்தையால் கூறுகிறார்களேயொழிய, உண்மையில் அவர்கள் வருந்தவில்லை என்றார் அவர் கோபத்துடன்.

அத்துடன், ஜிகாதி ஜான் அமெரிக்க வான்வழி தாக்குதலில் 2015ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டார் Bethany.

ஜிகாதி ஜான் என்னும் Emwazi இறந்த செய்தியை தான் பிரித்தானியாவில் இருக்கும்போது கேள்விப்பட்டதாக தெரிவிக்கும் Bethany, அப்போது தான் உச்ச கட்ட மகிழ்ச்சியடைந்ததாகவும், அவரது மரணத்தை பார்ட்டி வைத்துக் கொண்டாடியதாகவும் தெரிவிக்கிறார்.

இப்போது Emwazi கொல்லப்பட்ட இடத்தை நேரில் பார்க்கும்போது, அவர் கதை முடிந்தது என்பதை நினைக்கும்போது அது எனக்கு ஒரு பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது என்றார் Bethany.

தனது தந்தையின் உடல் எச்சங்களைத் தேடும் Bethany, ஆறு ஆண்டுகளானால் என்ன, 20 ஆண்டுகளோ, 30 ஆண்டுகளோ ஆனாலும் என்ன, என் தந்தையின் உடலை தேடுவதை நிறுத்தமாட்டேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்