பெண் நண்பர் கிடைக்க என்ன செய்யவேண்டும்?: இணையத்தில் தேடியவர் சிறைக்கு செல்லும் பரிதாபம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒருவரை நண்பராக்குவது எப்படி என இணையத்தில் தேடி கற்றுக்கொண்ட ஒருவர், அதை செயல்படுத்த முயன்றதால் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

பிரித்தானிய இளைஞரான Jamie Griffiths (19)க்கு பெண்களிடம் பழக ஒரே பயம், தயக்கம். எனவே நண்பர் கிடைக்க என்ன செய்யவேண்டும் என இணையத்தில் தேடியிருக்கிறார்.

பின்னர், தன்னுடன் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரை நண்பராக்க முயல, அவரது முயற்சி தோல்வியுற்றதோடு மட்டுமல்லாமல் சிறைக்கும் செல்ல இருக்கிறார்.

சுவர் பக்கமாக திரும்பி நின்றுகொண்டிருந்த Griffiths, தன்னை நோக்கி ஒரு பெண் வருவதை அறிந்ததும், அவரைப் பார்த்து புன்னகைத்ததாகவும், அவரது கையைத் தொட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் அந்த பெண்ணோ, ஒருவர் சுவரைப் பார்த்து நின்றுகொண்டிருந்ததாகவும், தன்னைக் கண்டதும், நில் என்று சொல்லி தனது கையைத் தொட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிற்காமல் இரண்டாவது முறை அவர் தனது இடுப்பைத் தொட்டதாகவும், தான் தடுக்காமல் இருந்திருந்தால் தனது மார்பகத்தை அவர் தொட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்.

தன்னை தொட்டுவிட்டு Griffiths வேகமாக சென்றுவிட்டதாகவும், தான் பயந்து அழத் தொடங்கிவிட்டதாகவும், அந்த சம்பவம் தனது கல்வியையும் தேர்வுகளையும் பாதித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் Griffithsஇடம், புகார் தெரிவித்துள்ள பெண்ணின் ஆதாரம் தெளிவாக இருப்பதாகவும், அவளை Griffiths தொட்டதற்கு பாலியல் நோக்கமேயன்றி வேறெதுவும் இருந்திருக்கமுடியாது என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்தனர்.

மான்செஸ்டர் நீதிமன்றத்தில் Griffiths மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், பாலியல் குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்படலாம். இம்மாத இறுதியில் Griffithsக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்