பிரித்தானியாவில் குழந்தைகளின் கண்முன்னே குத்திகொல்லப்பட்ட ஆசிய பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தைகளின் கண்முன்னே தாய் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டை சேர்ந்த பாத்திமா, லெய்செஸ்டரில் தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

நண்பர்களால் சுவேக்யா புரதோகி (32) என்று அழைக்கப்படும் இவர், பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு(உள்ளூர் நேரப்படி) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாத்திமாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பாகவே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், அப்பகுதியை சுற்றிலும் உள்ள மக்களிடம் கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த கொடூரமான சம்பவத்தின் போது மூன்று குழந்தைகளும் வீட்டிற்குள் இருந்ததாக கூறும் பொலிஸார், கொலைகாரன் குறித்த தகவல் ஏதேனும் கிடைத்தால் தங்களுடைய விசாரணைக்கு உதவியாக இருக்கும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்