பிரித்தானியாவில் உள்ள இந்திய உணவகத்தில் கோடரியுடன் தாக்குதல் நடத்திய நபர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள இந்திய உணவகத்தில் கோடரியுடன் தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பர்மிங்காம் பகுதியில் உள்ள கடைகளின் வரிசையில் 'பாலாஷ் பால்டி' என்கிற இந்திய உணவகம் செயல்பட்டு வருகிறது.

செப்டம்பர் 6ம் திகதியன்று கோடாரியுடன் கடைக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்த 19 வயது இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதில் கையில் கோடரியை வைத்திருந்த நபர், அந்த இளைஞரை நோக்கி ஆவேசமாக ஓங்கியுள்ளார். ஆனால் அதற்குள்ளாக அந்த இளைஞர் அங்கிருந்த ஓடிவிட்டார்.

இந்த நிலையில் வீடியோ காட்சியினை வெளியிட்டுள்ள பொலிஸார், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை யாருக்கேனும் அடையாளம் காணமுடிந்தால் தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்