கார் கண்ணாடியை உடைக்க முயன்ற போது திருடனுக்கு நடந்த கொடுமை: சுவாரஸ்ய வீடியோ!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சொந்த பணத்தில் சூனியம் வைப்பது என்பதை போல திருட பயன்படுத்திய கல்லாலே இங்கிலாந்தில் கார் திருடன் காயமடைந்துள்ளான்.

இங்கிலாந்தின் டர்ஹாம் பகுதியில் செங்கற்களை கொண்டு கார் கண்ணாடியை உடைத்து ஒரு திருடன் கைவரிசையை காட்ட முயற்சித்துள்ளான். ஆனால் திருடன் எறிந்த கல் அப்படியே அவன் பக்கம் திரும்பி முகத்தை பதம் பார்த்துள்ளது. அந்த வலியை பொறுக்க முடியாமல் திருடனும் அதே இடத்தில துடித்துள்ளான்.

சிசிடிவியில் பதிவியாகிருந்த காட்சியை கொண்ட அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், தற்போது 40 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்.

இந்த நிலையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சியானது, 5000க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்