போதையில் லண்டன் வீதியில் கட்டிப்புரண்ட ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா
586Shares

முன்னாள் ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட் ஒரு இரவு விருந்துக்குப் பிறகு லண்டன் கிளப்பிற்கு வெளியே சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஒலிம்பிக் நட்சத்திரமான உசேன் போல்ட் (33), நேற்று தன்னுடைய நண்பர்கள் சிலருடன் லண்டனில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.

நள்ளிரவில் அங்கிருந்த வெளியில் வந்த அவர், தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மற்றொரு குழுவுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

நேரில் பார்த்த சாட்சியம் கூறுகையில், சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். சண்டை விரைவில் முடிவுக்கு வராது என்று நினைக்கும் அளவிற்கு பயங்கரமாக இருந்தது. போல்ட்டை அவருடைய நண்பர்கள் சிலர் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர் எனக்கூறியுள்ளார்.

ஆனால் மற்றொரு சாட்சியம், போல்ட் அந்த சண்டையை சமாதானம் செய்ய மட்டுமே முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அதிகாலை 3.10 மணியளவில் ஆர்கில் தெருவில் சண்டை நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த இடத்தில் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேக நபரின் எந்த தடயமும் இல்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்