மூளைச்சாவடைந்த பிரித்தானிய சிறுமி... போராடிய பெற்றோர்: நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
464Shares

பிரித்தானியாவில் மூளைச்சாவடைந்த சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு பெற்றோரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடு கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் பகுதியில் குடியிருக்கும் முஹம்மது ராகிப் மற்றும் ஷெலினா பேகம் தம்பதியின் 5 வயது மகள் தஃபிதா ராகிப் கடந்த பிப்ரவரி மாதம் விபத்து ஒன்றில் சிக்கி மூளையில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயல் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிறுமி தஃபிதா ராகிப் பிழைப்பது கடினம் என ராயல் லண்டன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது பெற்றோர்கள் வெளிநாட்டு மருத்துவமனையில் தங்களது பிள்ளைக்கு சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

(Image: PA)

தற்போதுள்ள உடல் நிலையை கருத்தில் கொண்டு அது சாத்தியமல்ல என மருத்துவர்கள் நிராகரித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.

இதில் சிறுமி தொடர்பில் ராயல் லண்டன் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையை ஆராய்ந்துள்ள நீதிமன்றம், தற்போது பெற்றோரின் விருப்பப்படி இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள காஸ்லினி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்ப்பிக்க தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து சிறப்பு விமான ஆம்புலன்ஸ் மூலம் சிறுமி தஃபிதா ராகிப் இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

(Image: PA)

சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராயல் லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள், உடல் வருத்தி மேலும் சிகிச்சை அளிப்பது என்பது வீண் என தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மூளையானது நிரந்தரமாக சேதமடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ராயல் லண்டன் மருத்துவமனை மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.

(Image: PA)
(Image: PA)
(Image: change.org)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்