என்னை யாராவது கவனித்து கொள்ளுங்கள்! குடும்பத்தார் கைவிட்ட நிலையில் பூனை எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in பிரித்தானியா
168Shares

ஸ்காட்லாந்தில் 12 வயதான பூனையை அதை வளர்த்தவர்கள் கைவிட்ட நிலையில் என்னை யாராவது கவனித்து கொள்ளுங்கள் என கடிதம் எழுதியுள்ளது கண்ணீர் வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Motherwell நகரில் உள்ள சாலையில் சிறிய கூண்டில் பூனை ஒன்று சிலரால் கண்டுடெக்கப்பட்ட நிலையில் இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பூனையை மீட்ட போது அதற்கு வயது 12 என தெரிந்தது.

மேலும் அந்த கூண்டில் பூனை எழுதியது போல ஒரு கடிதம் இணைக்கப்பட்டிருந்தது.

அதில், என பெயர் சீக்கி, எனக்கு பிப்ரவரி வந்தால் 13 வயதாகிறது, என் குடும்பத்தார் என்னை இனி கவனித்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, தயவு செய்து யாராவது என்னை கவனித்து கொள்ளுங்கள் என எழுதியிருந்தது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கிலியன் கூறுகையில், தாங்கள் வளர்க்கும் விலங்குகளை யாரும் பாதியில் கைவிடக்கூடாது.

அதே நேரத்தில் பூனை எழுதியது போல கடிதம் எழுதப்பட்டுள்ளது அதன் நிலைமையை நமக்கு உணர்த்துகிறது.

இந்த பூனை மிகவும் வயதான பூனை என்பதால் உடல்நல கோளாறு ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்யவுள்ளோம்.

பூனையை இத்தனை காலம் வளர்த்தவர்களை தேடி வருகிறோம், அது நிச்சயம் தனக்கு பிடித்த இடத்தில் வாழும் என எதிர்பாக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்