இந்திய சிறுவனை தத்தெடுத்த லண்டன் தம்பதி: பணத்துக்காக கொலை செய்ததாக குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய சிறுவன் ஒருவனை தத்தெடுத்த லண்டன் தம்பதியினர், பணத்துக்காக அவனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு லண்டனில் வசிக்கும் ஆர்த்தி தீர் (55), அவரது கணவர் கவல் ரைஜதா (30) இருவரும் இந்தியாவுக்கு சென்று கோபால் செஜானி (11) என்ற சிறுவனை தத்தெடுத்துள்ளனர்.

கோபாலுக்கு பெற்றோர் இல்லை, எனவே அவரது சட்டப்பூர்வ பாதுகாவலர்களான சகோதரியும், கணவரும், தங்கள் தம்பி பிரித்தானியாவில் சென்று நன்றாக வாழட்டும் என்ற ஆசையில், அவனை தத்து கொடுப்பதற்கான ஆவணங்களை தயார் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.இதற்கிடையில் ஆர்த்தி, கோபால் பெயரில் 150,000 பவுண்டுகளுக்கு காப்பீடு எடுத்துள்ளார்.

கோபால் இறந்தாலோ, அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகோ அந்த தொகை ஆர்த்திக்கு கிடைக்கும்.

அதற்காக 15,000 பவுண்டுகள் வீதம், இரண்டு பிரீமியம் கட்டணங்களும் செலுத்தி உள்ளார். பின்னர் ஆர்த்தியும் அவரது கணவரும் லண்டன் திரும்பிவிட்டிருக்கின்றனர்.

சில நாட்களுக்குப்பின், இந்தியாவில், கோபாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் குத்தி சாலையோரம் போட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.

HANIF KHOKHAR/BBC

கோபாலை காப்பாற்ற வந்த அவரது சகோதரி கணவரான கர்தானி என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சில நாட்களுக்குப்பின் உயிரிழந்திருக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆர்த்தி தம்பதியின் நண்பர் என்பதும், அவர் சில காலம் ஆர்த்தி குடும்பத்துடன் லண்டனில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

எனவே, ஆர்த்தி மற்றும் அவரது கணவர் மீது கொலை மற்றும் கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டியது உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன.

HANIF KHOKHAR/BBC

அவர்கள் இருவரும் இந்திய அரசின் கோரிக்கையின் பேரில், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டனர். என்றாலும் அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது.

இரட்டைக்கொலைக்கான தண்டனை இந்தியாவில் ஜாமீன் இல்லாத ஆயுள் தண்டனை என்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை நாடு கடத்துவது பிரித்தானிய சட்டப்படி அவர்களுடைய மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி, அவர்களை நாடு கடத்துவதற்கு உடன்பட மறுத்துவிட்டார் நீதிபதி.

அந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட உள்ளது. கோபாலின் காப்பீட்டுத் தொகை ஆர்த்தி தம்பதியருக்கு வழங்கப்படவில்லை!

GUJURAT POLICE

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்