Brexit... சிறப்பான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது! பிரித்தானியா பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடைய புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனால் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உள்ள அயர்லாந்து குடியரசு இடையிலான எல்லைப் பிரச்னை மீண்டும் உருவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால் வடக்கு அயர்லாந்தின் வர்த்தகம், தொழில் மற்றும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, வடக்கு Lifford மற்றும் Strabane பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் அப்படி வெளியேறினால் அது மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து நாட்டில் பலரும் பிரித்தானியா வெளியேறுவது குறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் உள்ளது. வரும் சனிக்கிழமை இந்த திட்டம் குறித்து பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வாழ்க்கைச் செலவு, தேசிய சுகாதார சேவை, வன்முறைக் குற்றம் மற்றும் நமது சூழல் போன்றவைகளுக்கு நாம் முன்னுரிமை வழங்க முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கருடன் நடத்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமரைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய தலைவர்கள் சிலரும் தங்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், பிரெக்சிட்டிற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுவிட்டதாகவும், அது நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கான நியாயமான மற்றும் சீரான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக நீண்டகாலமாக இழுபறி நீடித்த நிலையில், தற்போது உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக போரிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers