உடல் நலமற்ற பெண் பயணியிடம் அத்துமீறியதாக இந்திய வம்சாவளி சாரதி கைது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் உடல் நலமற்ற ஒரு பெண் பயணியை பாலியல் ரீதியாக தாக்கியதாக, இந்திய வம்சாவளி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனிலுள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக டாக்சி ஒன்றில் ஏறியுள்ளார் ஒரு 27 வயது பெண்.

மிகவும் உடல் நலம் குன்றியிருந்த அந்த பெண் காரில் ஏறி சற்று தொலைவு பயணித்த நிலையில், அவரை காரின் முன் இருக்கையில் வந்து தன் அருகே அமரும்படி கூறியிருக்கிறார் தெமூர் ஷா என்ற அந்த சாரதி.

இன்னும் சற்று தொலைவு பயணிக்கும்போது, அந்த பெண்ணுக்கு வாந்தி வந்திருக்கிறது.

வாந்தி வருவதாக கூறியதும் காரை நிறுத்திய ஷா, அந்த பெண் தன்னை தாண்டி, குனிந்து வாந்தி பண்ணும்போது அவரை பாலியல் ரீதியில் தொட்டிருக்கிறார்.

Uber driver Temur Shah

அவர் வாந்தி பண்ணிக்கொண்டிருக்க, ஷா தொடர்ந்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

எதிர்ப்பதற்கு முற்றிலும் உடலில் பெலன் இல்லாத நிலையில், மொபைல் போனில் பேட்டரி காலியாகிவிட, கையில் பணமும் இல்லாமல், யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாமல் தவித்த அந்த பெண், மீண்டும் தன்னை தொடவேண்டாம் என்று ஷாவிடம் கூறியுள்ளார்.

பின்னர் அவரை அவரது வீட்டருகே இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டிருக்கிறார் ஷா. உடனடியாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட, கைது செய்யப்பட்டார் ஷா.

முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உரிமம் பெற்ற ஒரு சாரதியிடமிருந்து உயர்ந்த தரத்தைத்தானே எதிர்பார்ப்போம் என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர், ஷா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமமும் பறிக்கப்பட்டுள்ளது என்றார்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்