மனைவி மகள்களை கொலை செய்த வழக்கு: இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்படும் முதல் நபர்: !

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாழ்வதற்காகவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஒருவர், மனைவியையும் மகள்களையும் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிய நிலையில், தற்போது பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பங்களாதேஷைச் சேர்ந்த Mohammed Abdul Shakur(46), பிரித்தானியாவில் வாழும் தனது உறவினரான Juli Begum (26)ஐ திருமணம் செய்துகொண்டார்.

Juli அதிகமாக மற்றவர்களுடன் பழகாத, கட்டுக்கோப்பான ஒரு பெண்.

1999ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு வந்து Shakurஐ திருமணம் செய்துகொண்ட Juli, மீண்டும் பிரித்தானியா திரும்ப, அவர் ஏற்பாடு செய்த ஒரு ஆண்டு விசாவில் 2000ஆம் ஆண்டு லண்டன் வந்தார் Shakur.

ஆனால், காலப்போக்கில், தன் மீதோ தங்கள் மகள்கள் மீதோ அன்பில்லாமல், தான் எப்படியாவது பிரித்தானிய பிரஜை ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னை Shakur திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

தான் பிரித்தானியாவில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால், மனைவியையும் அவரது மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார் Shakur.

மூன்று ஆண்டுகள் திருமண வாழ்வு, இரண்டு குழந்தைகள் என ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றி, பிரிந்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி, Juliயின் சகோதரி ஒருவர், பத்து நாட்களாக Juliயைப் பார்க்கவில்லை என பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பொலிசார் East Hamஇலுள்ள Juliயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு Juliயும் அவரது இரண்டு குழந்தைகளான Anika (5) மற்றும் Thanha Khanum (6) ஆகியோரும் பிணமாக கிடந்திருக்கிறார்கள்.

பொலிசார் CCTV கமெரா காட்சிகளை சோதிக்கும்போது, Shakur, Juli மற்றும் பிள்ளைகள், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேயும், பின்னர் வீட்டுக்கும் வருவது தெரிந்துள்ளது.

Shakurஐ தேடினால் அவர் பிரித்தானியாவிலேயே இல்லை. ஜனவரி 5ஆம் திகதியே அவர் தப்பி விட்டார்.

ஆனால், இந்தியாவில் புலம்பெயர்தல் தொடர்பான குற்றம் ஒன்றிற்காக 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரை பிரித்தானியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிகைகள் தொடங்கின.

இந்நிலையில் பிரித்தானியாவில் செய்த கொலைகளுக்காக விசாரிக்கப்படுவதற்கு வசதியாக, Shakur மீதான வழக்குகளை இந்திய அரசு தள்ளுபடி செய்துவிட்டு, அவரை நாடு கடத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹீத்ரோ விமான நிலையம் வந்திறங்கிய Shakur, கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்.

ஞாயிறன்று, அவர் மீது Juli Begum மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

திங்களன்று Barkingside மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Shakur, நேற்று முன்தினம் லண்டனிலுள்ள Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Abdul Shakur, இவ்வகை வழக்கொன்றிற்காக இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்படும் முதல் நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்