லண்டனில் லொட்டரியில் விழும் பரிசு பணத்தை வெற்றியாளர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? சுவாரசிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் உள்ளிட்ட பிரித்தானிய நகரங்களில் லொட்டரியில் பரிசுகளை வென்ற வெற்றியாளர்கள் பரிசு பணத்தை எப்படி செலவிடுவார்கள் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புகைப்பட கண்காட்சி லண்டனில் உள்ள Fulham Palace-ல் அக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி பிரித்தானியாவின் தேசிய லொட்டரியில் பெரியளவில் பரிசுகளை வென்ற நபர்கள் அதை தாங்கள் செலவிடும் விதம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்படும். தேசிய லொட்டரியின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த விடயம் செய்யப்படுகிறது.

Image: PA

அதன்படி டென்னிஸ் - ஷெர்லி தம்பதி கடந்த 2018 பிப்ரவரியில் லொட்டரியில் £18,139,352 பரிசை வென்றார்கள். அதை வைத்து தாங்கள் வாழும் பகுதியில் பொது கழிப்பிடங்கள் கட்டியுள்ளனர்.

இது குறித்து தம்பதி கூறுகையில், நாங்கள் ஒரே வீட்டில் தான் கடந்த 58 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் வீடு மட்டுமின்றி இந்த பகுதியையே நேசிக்கிறோம்.

அங்கு பொதுகழிப்பிடங்கள் கட்ட பணம் தேவைப்படுவதை அறிந்து லொட்டரியில் வென்ற பணத்திலிருந்து கொடுத்தோம் என கூறியுள்ளனர்.

அதே போல வேல்ஸை சேர்ந்த பயி டேவிஸ் (37) மற்றும் ரிச்சர்ட் (43) தம்பதிக்கு கடந்த 2018 ஜூனில் லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்தது.

இதில் £20,000 பணத்தை வைத்து தங்கள் செல்ல நாய் லூசி நடைப்பயிற்சிக்கு செல்லும் வகையில் ஒரு காலி நிலத்தை வாங்கியுள்ளனர்.

Camelot/PA

ரிச்சர்ட் கூறுகையில், சாலையில் எங்கள் லூசியை மற்ற நாய்கள் கண்டால் துரத்துகிறது, இதோடு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தாலும் பிரச்னை தான்.

அதனால் அதான் அதற்காகவே தனி இடம் வாங்கினோம் என கூறியுள்ளார்.

அதே போல சமையல்காரரான பில் முல்லர்கீ (59) மற்றும் அவர் மனைவி கேத் (58)க்கு லொட்டரியில் £1 மில்லியன் மில்லியன் பணம் கிடைத்தது.

இதை வைத்து அவர்கள் பெரியளவிலான தங்கள் கனவு வீட்டை கட்டியுள்ளனர்.

இருவரும் சிறிய வீட்டில் பல ஆண்டுகளாக வசித்த நிலையில் அவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டத்தால் பெரிய வீட்டை வாங்கியுள்ளனர்.

இப்படி லொட்டரியில் பரிசை வென்ற பலரும் தங்கள் சொந்த காரியங்கள் மற்றும் பொது விடயங்களுக்கு பரிசு பணத்தை செலவழித்தது தெரியவந்துள்ளது.

Image: PA

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்