இணையத்தில் வைரலான அரிய காட்சி.. 2019ஆம் ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இதுதான்!

Report Print Kabilan in பிரித்தானியா

சீன புகைப்படக்கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று, 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படமாக தெரிவாகியுள்ளது.

Wild Life Photography என்பது விலங்குகள், பறவைகளின் வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடி தத்ரூபமாக பதிவு செய்வதாகும். இதற்காக புகைப்படக்கலைஞர்கள் நாட்கணக்கில், மாதக்கணக்கில் காடுகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு காத்திருந்தால் தான் அரியவகை புகைப்படங்கள் கிடைக்கக்கூடும்.

சீனாவைச் சேர்ந்த யோங்க்யூங் பவோ எனும் Wild Life புகைப்படக்கலைஞர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை எடுத்த யோங்க்யூங்கிற்கு கடந்த அக்டோபர் 15ஆம் திகதி, 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த Wild Life புகைப்படக்கலைஞர் விருது அறிவிக்கப்பட்டது.

அதிலிருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 48,000 புகைப்படக்காரர்களைக் கடந்து யோங்க்யூங் இந்த விருதினை வென்றுள்ளார். அப்படி என்ன இந்த புகைப்படத்தில் சிறப்பு என்றால், திபத்திய நரியும் ஒன்று, அணிலை கண்டதும் அதனை இரையாக பிடிக்க பதுங்கியவாறு ஆயத்தமாகிறது. அதனை கவனித்ததும் அந்த அணிலின் கண்களில் அதிர்ச்சி தெரிகிறது.

Yongqing Bao

இந்த நிகழ்வைத் தான் மிகத் துல்லியமாக யோங்க்யூங் பவோ படம்பிடித்துள்ளார். ‘The Moment’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு தான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை தெரிவு செய்த லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆய்வுக் குழுத் தலைவர் ராஸ் கிட்மான் கூறுகையில்,

‘மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று இது, இதைத் தக்க தருணத்தில் பதிவு செய்த செயல் பாராட்டுக்குரியது. அதற்குத் தான் விருது அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்