லொட்டரியில் வென்ற அனைத்து பணத்தையும் மகளுக்காக செலவு செய்த பெற்றோர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் லாட்டரியில் வென்ற அனைத்து பணத்தையும் உடல்நிலை சரியில்லாத மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

1994 முதல், தேசிய லாட்டரி மூலம் இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்களுக்கு 71 பில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 5500க்கும் அதிகமான மில்லியனர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் ஒரு குடும்பம் மட்டுமே அந்த பணத்தை சிறப்பான வழியில் பயன்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த ஆடம் (35) மற்றும் ஆமி பிரையர் (30) என்கிற தம்பதியினருக்கு பிறந்த குழந்தை குரோமோசோம் 11 குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்துள்ளது.

இதனால் குழந்தை பிறந்தது முதலே அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு அவர்கள் செலவு செய்து வந்துள்ளனர். ஆமியின் மகப்பேறு ஊதியம் முடிவடையவிருந்ததால், லண்டனில் மருத்துவமனைக்குச் செல்வதற்கான செலவு, ரயில் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் என அனைத்தும் அவர்களுடைய கவலையை அதிகரித்துள்ளன.

அப்போது தான் ஆகஸ்ட் 2017 இல் லொட்டரியில் ஒரு மில்லியன் பரிசுத்தொகை தம்பதியினருக்கு கிடைத்துள்ளது. அதன்மூலம் சிகிச்சையை முடித்ததோடு, மகளின் ஆசைப்படி அழகிய அறை ஒன்றினை அதிக விலையில் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த அறையை தங்களுடைய மகள் அதிகம் நேசிப்பதாகவும், அதனை சிரித்து மகிழ்வதாகவும் ஆடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அந்த குடும்பத்தினை பெருமைப்படுத்தும் விதமாக ஃபார்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற ஒரு சிறப்பு தேசிய லாட்டரி கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நட்சத்திர படங்களில் ஒன்றாக சார்லோட் உணர்ச்சி மிகுதியுடன் அறையை அனுபவிக்கும் குடும்பத்தின் படமும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்