பிரித்தானியா இளவரசர்கள் வில்லயம்-ஹரி சகோதர பந்தத்தில் விரிசல்

Report Print Basu in பிரித்தானியா

பிரத்தானியா இளவரசரும் தனது சகோதரனுமான வில்லயமுடன் இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிப்பதாக இளவரசர் ஹரி ஒப்புக் கொண்டுள்ளார்.

தனக்கும் சகோதரர் வில்லயம் இடையே பதற்றம் நிலவுவதாக பரவி வந்த வதந்திகள் தொடர்பில் ஐடிவி நேர்காணலில் பதிலளித்த இளவரசர் ஹரி கூறுகையில், நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம்.

எனது பொறுப்பு, வேலையின் ஒரு பகுதி மற்றும் குடும்ப அழுத்தத்தினால் தவிர்க்க முடியாத சில விஷயங்கள் நடக்கும். ஆனால், நாங்கள் சகோதரர்கள், எப்போதுமே சகோதரர்கள் தான்.

தற்போது, வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம், ஆனால், எனக்காக அவர் இருப்பார், அவருக்காக நான் இருப்பேன். நாங்கள் மிகவும் பிஸியாக இருப்பதால் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை, ஆனால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன்.

பெரும்பான்மையான விஷயங்கள் உருவாக்கப்படுகிறது, ஆனால் சகோதரர்களாகிய எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு நல்ல நாட்கள் உள்ளன, மோசமான நாட்களும் உள்ளன என ஹரி மனதிறந்து கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்