பிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள thermal கமெராவில் பதிவான ஒற்றைப் புகைப்படம் பிரித்தானிய பெண்மணியின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

பிரித்தானியாவின் Slough நகரைச் சேர்ந்தவர் 41 வயதான Bal Gill. இவரே thermal கமெராவில் பதிவான புகைப்படத்தால் தமக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தவர்.

Bal Gill கடந்த மே மாதம் சுற்றுலாவின் ஒருபகுதியாக எடின்பர்க் நகரில் உள்ள பிரபல அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த thermal கமெராவில் இவரது இடப்பக்க மார்பகத்தில் சிவப்பு திட்டு இருப்பதை காட்டியுள்ளது.

அந்த சிவப்பு திட்டு வழக்கமில்லாத ஒன்று என கருதிய அவர், உடனடியாக இணையத்தில் அது தொடர்பாக தகவல் திரட்டியுள்ளார்.

அதில், சிலவேளை புற்றுநோய் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிய ஒருவகை thermal கமெராவை பயன்படுத்துவதை அவர் உறுதி செய்தார்.

இதனையடுத்து தமது குடும்ப மருத்துவரை அணுகி தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவருக்கு மாரபக புற்றுநோயின் ஆரம்ப கட்டம் என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அந்த புற்றுநோயானது மேலும் பரவாமல் இருக்க மூன்றாவது அறுவைச் சிகிச்சைக்காக Bal Gill காத்திருக்கிறார்.

இதனிடையே தமது வாழ்க்கையை மாற்றிய அந்த அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து Bal Gill கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்