அதிக பணம் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என்ற காதலி! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன காதலன்.. நடந்த திருமணம்

Report Print Raju Raju in பிரித்தானியா
652Shares

பிரித்தானியா லொட்டரி வரலாற்றில் மிக பெரிய பரிசை அள்ளிய நபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதோடு சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார்.

ஆண்ட்ரூ கிளார் மற்றும் திரிஷா பயர்ஹஸ்ட் ஆகியோர் காதலித்து வந்தனர்.

இருவரும் சாதாரண பொருளாதார நிலையில் இருந்த நிலையில் அதிகளவில் பணம் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் திரிஷா கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரு வாங்கிய லொட்டரியில் அவருக்கு £76 மில்லியன் என்ற பிரித்தானிய லொட்டரி வரலாற்றின் மிக பெரிய பரிசுகளில் ஒன்றான பரிசு தொகை கிடைத்தது.

Image : PA

ஆனால் ஒரு மாதத்துக்கும் மேலாக பரிசு தொகையை வாங்கி கொள்ளாத ஆண்ட்ரூ பின்னர் பரிசு பணத்தை பெற்றார்.

இதையடுத்து ஆண்ட்ரூ தனது காதலி திரிஷாவை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

லொட்டரியில் விழுந்த பரிசு பணத்தில் £700,000-ஐ Porsche, a McLaren மற்றும் a Mercedes போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்க ஆண்ட்ரூ செலவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அவர் மனைவி திரிஷா தன்னுடைய பழைய காரையே உபயோகப்படுத்தி வருகிறார்.

லொட்டரியில் விழுந்த மீதி பணத்தை வைத்து தம்பதி என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்