வயிற்றுக்கு வெளியே குடலுடன் பிறந்த சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வயிற்றுக்கு வெளியில் குடலுடன் பிறந்த சிறுவன் ஒருவனை அமெரிக்க இணையதளம் ஒன்று விடாமல் கேலி செய்த நிலையில், தற்போது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.

பிறக்கும்போது குடல்கள் முழுவதும் வயிற்றுக்கு வெளியில் இருந்த நிலையில் பிறந்தான் குட்டிப்பையன் Albie Greenwood.

2017ஆம் ஆண்டு மிகப்பெரிய அறுவை சிக்கிசை செய்யப்பட்டபின், இப்போது மிக நன்றாக இருக்கிறான் Albie.

ஆனால், Albie பிறந்ததிலிருந்தே அமெரிக்க இணையதளம் அவனை கடுமையாக கேலி செய்து வந்தது.

Credit: MEN/Examiner Live

Albieயின் தந்தையான Huddersfieldஐச் சேர்ந்த Thomas Greenwood (27), உண்மையில், இப்போதுதான் தன் மகன் கேலிக்குள்ளாக்கப்பட்ட விடயம் தனக்கு தெரியவந்தது என்றாலும், அவன் பிறந்ததிலிருந்தே அந்த தளத்தைப் பயன்படுத்தி பலர் அவனை கேலி செய்துள்ளார்கள் என்கிறார்.

Albieயின் அம்மா Ashton, அந்த இணையதளம் அகற்றப்படவேண்டும் என்று கோரி, மனு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதுவரை அந்த மனுவில், 4,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். இதற்கிடையில், தற்போது இரண்டு வயதாகும் Albie ஆரோக்கியமாக இருக்கிறான்.

Credit: MEN/Examiner Live

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்