பிரித்தானியாவை உலுக்கிய பகீர் சம்பவம்: 100 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட விசாரணை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் Torquay நகரில் அமைந்துள்ள ஜாக் அண்ட் ஜில் நர்சரியில் பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இரையானதாக எழுந்த புகாரில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களை பொலிசார் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த புகாரில் சிக்கிய இளைஞரை கைது செய்துள்ள பொலிசார், அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.

விவகாரத்தில் சிக்கிய ஜாக் அண்ட் ஜில் நர்சரியில் இருந்து கண்காணிப்பு கெமராவை பொலிசார் மீட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக அது கருதப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் முதன் முறையாக கடந்த ஜூலை 29 ஆம் திகதி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jack and Jill Childcare

இதனையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், புகாரில் சிக்கிய இளைஞரை கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 22 ஆம் திகதி வரை காவலில் இருந்த அந்த இளைஞரை பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சுமார் 250 மணி நேர கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும், ஜாக் அண்ட் ஜில் நர்சரியில் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்