குழந்தையுடன் விளையாடிய தந்தை... திடீரென எழும்பிய ராட்சத அலை: பதற வைத்த வீடியோ

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ராட்ச அலையில் சிக்கி தந்தையும், அவரது குழந்தையும் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Isle of Wight என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சிலர் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் அப்பாவும், குழந்தையும் இழுத்து செல்லப்பட்டனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க ஓடினர்.

ஆனால் சுதாரித்துக்கொண்ட அந்த தந்தை அருகில் உடைந்து கிடந்த இருக்கையை பிடித்துக்கொண்டு, தன்னையும் குழந்தையும் காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்