பிரித்தானியாவில் சாதிக்கும் டாப் 10 குழந்தைகளின் பெயர் பட்டியல்: பெற்றோர்களே தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் படிப்பு அவர்களின் அறிவு கூர்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில், சிறந்த 20 பெயர்கள் குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஆன்லைனில் படிப்பு சொல்லித் தரும் பிரபல தனியார் நிறுவனம் tutorhouse, கடந்த ஐந்து ஆண்டுகள் தங்களுடைய டுடோரியலில் படித்த மாணவ மற்றும் மாணவியர்கள்(குழந்தைகள்) பெயர்களில் யார் அதிகம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள்? சிறந்த மாணவர்களாக உருவாகியிருக்கிறார்கள்? சாதித்து இருக்கிறார்கள்? என்பது குறித்து ஓரு ஆய்வு நடத்தியுள்ளது.

இதில் பத்தாயிரம் குழந்தைகளின் பெயர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி நடத்தப்பட்ட ஆய்வில் இறுதியாக சிறந்த 10 ஆண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் 10 சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏனெனில் தற்போது இருக்கும் காலத்தில் பெற்றோர் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு அதிக அக்கறை எடுத்து கொள்கின்றனர், அவர்களின் நேரத்தை குறைப்பதற்காகவே இந்த முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.

டாப் 10 சிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள்

 • George
 • Thomas
 • Mohammed
 • Alfie
 • Marcus
 • Hugo
 • Krishna
 • Timothy
 • Rajesh
 • Daniel

டாப் 10 சிறந்த பெண் குழந்தைகளின் பெயர்கள்

 • Emma
 • Fatima
 • Eve
 • Amelia
 • Felicity
 • Clare
 • Priya
 • Zhara
 • Joanna
 • Sarah

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்